×

கோத்தகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

 

கோத்தகிரி,மே9: கோத்தகிரியில் குன்னூர் டிஎஸ்பி தலைமையில் கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோத்தகிரி அருகே உள்ள கெரடா, கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் டிஎஸ்பி கோவிந்தசாமி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தற்போது உள்ள காலக்கட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொடிய போதை பழக்கமான கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி தங்களின் எதிர் காலத்தை வீணாக்குவதுடன் எதிர் வரும் தலைமுறையையும் கெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ள தமிழக காவல்துறைக்கு அனுமதி அளித்து, இதுபோன்ற கஞ்சா போதை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

இதன் அடிப்படையில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று குன்னூர் டிஎஸ்பி கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் கெரடா கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் பதி, கோத்தகிரி உதவி ஆய்வாளர்கள் ரகுமான் கான், யாதவ் கிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி காவலர்கள் முஜாஹிர்,ரஞ்சித்,நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Anti-Drug Awareness Camp ,Kotagiri ,Kothagiri ,Coonoor DSP ,Kerada ,Dinakaran ,
× RELATED பஞ்சகவ்யா தயாரிப்பு பயிற்சி...